அம்பத்தூர் : நவம்பர் 25, 2025
மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 7 தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள்.


அவ்வகையில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி சென்னை, அம்பத்தூர் ம.நீ.ம மாவட்ட செயலாளர் திரு.தனபாலன் அவர்கள் தலைமையில் சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் அப்பகுதி மக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை ஆலோசனை கேட்டுக் கொண்டனர்.


“மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,
அம்பத்தூர் மநீம மாவட்ட செயலாளர் திரு.A.தனபாலன் அவர்கள் தலைமையில், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் முன்னிலையில்,
அம்பத்தூர் – வெங்கடாபுரம், GRK Mini Hall-இல், மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், நீரிழிவு கட்டுபாடு, பொது மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை பெற்று பயனடைந்தனர்.
இதில் கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. ரூபலிங்கம், பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சரவணக்குமார், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. M.M.சாமி மற்றும் அம்பத்தூர் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். – மக்கள் நீதி மய்யம்