டிசம்பர் : 20, 2025
அறிமுகமான காலத்தில் தொடங்கி மலையாள திரையுலகில் அசைக்கமுடியாத ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தார் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் நகைச்சுவை வேடங்கள் தரித்தும் தனது தனிச்சிறப்பை கொண்டு சிறந்த கலைஞராக மலையாள திரையுலகில் பரிணமித்தார்.

பின்னர் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதும் இல்லாமல் சில படங்களை இயக்கவும் செய்தார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு தனிச்சிறப்புகள் மூலம் மெருகேற்றி உள்ளார் என்றால் மிகையாகாது. இவரது மகனான வினீத் ஸ்ரீநிவாசன் திரையுலகில் சிறந்த நடிப்பை வழங்கி வருகிறார்.
நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களும் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் தொடங்கிய நட்பு பல்வேறு காலகட்டங்கள் கடந்த பின்னரும் தொடர்ந்து வந்தது அனைவரும் அறிந்ததே.
சிறப்பு வாய்ந்த திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவு குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் இரங்கற்செய்தி வெளியிட்டுள்ளார்.

