நவம்பர் 22, 2025
முதுபெரும் கவிஞரும், தமிழ் ஆர்வலருமான திரு.ஈரோடு தமிழன்பன் அவர்கள் தூர்தர்ஷன் தொலைக்கட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழின் மீது பெரும் பற்றும் மதிப்பும் கொண்டவர் தமிழன்பன் அவர்கள்.

இயற்பெயர் ந.ஜெகதீசன் என்பதை நாடங்கள் மற்றும் இலக்கியத்தின் ஈடுபாடுகளால் தமிழன்பன் என புனைபெயரில் இயங்கி வந்தார். மரபுக் கவிதைகள் எழுதுவதில் புலமை பெற்றவர் மேலும் (புதுக்கவிதைகள்) நவீனக் கவிதைகள் எழுதுவதிலும் வல்லமை பெற்றவர். வானம்பாடி இலக்கிய வட்டத்தில் பங்கேற்று சிறப்பு பெயர் பெற்றவர். அவை மட்டுமல்லாது ஹைக்கூ, சென்ரியூ, லிமெரிக்கூ என கவிதைகளின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தன்னை புதுப்பித்து கொண்டவர் என்று சொன்னாலும் மிகையாகாது.
சாகித்ய அகடெமி விருது பெற்றதும் பொதுவுடைமை, பகுத்தறிவுவாதம் மற்றும் மனிதாபிமானம் கொண்டவர் தமிழன்பன் அவர்கள்.
வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழன்பன் அவர்கள் மறைவிற்கு இரங்கற்செய்தி வெளியிட்டுள்ளார்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்