கடந்த ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வின் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அனைவரும் அறிந்ததே.
சுமார் 500+ வாக்குறுதிகள் அளித்து பல இலவசங்களை அறிவித்து குறுக்கு சால் ஓட்டி பணக்கட்டுகளை வீசி ஜெயித்த கதை உண்டு. அதிலும் முக்கியமாக அவர் சொல்வதைப் போல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எனும் பழமொழியே தோற்கும் விதமாக கடல் மணல் துகள் போல் போகிற வழியெல்லாம மக்களிடையே அள்ளித் தெளித்த பின்னர் கிடப்பில் போடப்பட்டது. (அந்தப் பழமொழியே சிரிக்கும் அளவிற்கு அதை தப்பும் தவறுமாக சொன்ன நேரங்கள் நிறைய உண்டு).
கழக ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து தான் என்றும் வெக்கம் மானம் ரோஷம் சூடு சொரணை எல்லாம் இருப்பவர்கள் மட்டுமே அந்த ரகசியம் தெரிந்தவர்கள் எனவும் தமிழகம் முழுக்க மேடை தோறும் வாகனங்களில் பரப்புரை செய்யும் போது சொன்னார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் ஆட்சியை பிடித்ததும் அந்த நீட் தேர்வு ரத்து மசோதா தமிழக சட்டமன்றம் டு ஆளுநர் மாளிகை மற்றும் இரண்டாம் முறையாக மீண்டும் ஒரு மசோதா தமிழக சட்டமன்றம் டு ஜன ஜனாதிபதி மாளிகை என ஏதோ பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்து போன்று சுற்றி வருகிறது.
அடுத்த முக்கியமான ஒரு மற்றொரு வாக்குறுதி, இல்லத்தரசிகளுக்கு மாதா மாதம் ₹ 1000 வழங்கப்படும் என்று மய்யத்தின் திட்டத்தை காப்பியடித்து சொன்னது ஒரு பக்கம். ஆனால் கிடப்பில் போடப்பட்டது இந்த திட்டம். இதனிடையே திடீரென இரண்டு மூன்று நாட்களாக இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனும் ரீதியில் விண்ணப்ப படிவம் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டது.
இப்போது அந்த திட்டத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு உரிமைத் தொகை வேண்டுமா அதற்கு ஓட்டு போடுங்க எனும் படியாக போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். கூடவே அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போலல்லாமல் அவசர அவசரமாக அச்சிட்ட காகித விண்ணப்பம் ஒன்றை விநியோகம் செய்து வருவது சட்டப்படி குற்றம்.
அப்போது ஒரு பேச்சு இப்போது ஒரு பேச்சு என திரியும் ஆளும் கட்சி திமுக வின் இரட்டை நிலை அரசியல் ஆகும். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தபடும் என்று அறிவிப்பது தேர்தல் விதிமுறை சட்டத்தை மீறுவதாகும்.
இதைப்பற்றி சமூக செயற்பாட்டாளர் திரு டேவிட் மனோகர் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.