வரவிருக்கும் பிப்ரவரி 19, 2022 அன்று தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது அனைவருக்கும் தெரிந்ததே.

சின்னதா ஒரு கேள்வி பதில் தொனியில் படிச்சித் தெரிஞ்சிக்கலாம், படிச்சுட்டு தெரியாம இருக்கும் பலருக்கு இங்க படிச்சதை சொல்லுங்க இல்லன்னா இந்த வலைதளத்தின் லிங்க்கை அவங்களுக்கு அனுப்பி விடுங்க, ஏன்னா நல்லதை நாலு பேருக்கு மட்டுமில்ல நாலு கோடி பேருக்கு சொல்லலாம் தப்பேயில்லை.

கேள்வி : சரி மொத்தம் எத்தனை பதவிகள் ?

பதவி : மொத்தம் 12,820 பதவிகள்

கேள்வி : அதில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் எத்தனை ?

பதில் : 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆக மொத்தம் 649 உள்ளாட்சி மன்றங்கள்.

கேள்வி : இதில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி உறுப்பினர்கள் எத்தனை ?

பதில் : மாநகராட்சிக்கு 1,064 உறுப்பினர்கள், நகராட்சிக்கு 3,468 உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சிக்கு உறுப்பினர்கள்.

இப்போ உங்களுக்கு தெரிஞ்சுருச்சி சராசரி சாமானியர் சார்பாக நமக்கு மத்தியில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை தேர்வு செய்து உள்ளாட்சி நடக்கும் மன்றங்களுக்கு அனுப்பி வையுங்கள் இலஞ்சம் இல்லாமல் உங்களின் தேவைகள் சேவைகளாக நிச்சயம் கிடைக்கும்.

ஓட்டுக்கு காசு கொடுப்பது தப்பு தான் அதே சமயம் ஓட்டுக்கு காசு வாங்குவது அதைவிட பெரிய தப்பு.

ஆங் அப்புறம் முக்கியமான விஷயம் வாக்குப்பதிவு நடக்கப்போவது சனிக்கிழமை தான், லீவு இல்லன்னா அன்னைக்கு ஒரு நாள் லீவு போடுங்க வாக்குச்சாவடி போய் ஓட்டு போடுங்க, போடாதவங்க கிட்ட பெருமையா சொல்லுங்க சீக்கிரம் போய் அவங்க ஓட்டுகளை போடச் சொல்லுங்க.

ஓட்டுப் போட்டு விரலில் வைக்கப்படும் கருப்பு மையால் வரும் கறை நல்லது.