சென்னை மார்ச் 31, 2022
சென்ற மாதம் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் ஆளும் கட்சி வேட்பாளர்கள். மேயர் மற்றும் துணை மேயர் என பெரும்பான்மை பலத்துடன் சென்னை மாநகராட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ஆளும் திமுக.
இது போதாதா இவர்களின் ஆட்டத்திற்கு ? ஏற்கனவே ஆடும் இவர்களுக்கு கால்களில் சலங்கையை கட்டிவிட்டால் அண்டமே ஆடும் அளவிற்கு ஆட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வார்டு எண் 34 இன் கவுன்சிலர் திருமதி K. ஷர்மிளா காந்தி அவரின் கணவர் திமுக வின் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக பதவி வகிக்கும் கருணாநிதி, வட்டத் துணைசெயலாளர் கார்த்தீபன் மற்றும் உடன் இருக்கும் அடிபொடிகள் சூழ வீடு கட்டிக்கொண்டிருக்கும் திருமதி தேவி என்பவரிடம் சுமார் ரூபாய் 10 லட்சம் கமிஷனாக கேட்கப்பட்டதாக தெரிகிறது. கவுன்சிலரின் கணவர் கருணாநிதி மேற்படி கட்டப்படும் வீட்டினை சென்று பார்த்ததாகவும் அதன் உரிமையாளரிடம் கமிஷன் கேட்கவும் அவர்களை கவுன்சிலரான தனது மனைவியின் அலுவலகத்திற்கு அழைத்துப் பேச முற்படுகையில் கமிஷனாக மேற்சொன்ன தொகையை கொடுக்கும்படி அழுத்தம் தரவும் அதற்கு அவ்வீட்டின் உரிமையாளர் தேவி தனது செல்போன் கேமராவில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அக்காட்சிகள் வைரல் ஆக பரவத்துவங்கியது. அதில் அந்த கவுன்சிலர் தனது நாற்காலியில் அமராமல் வேறிடத்தில் அமர்ந்து கொண்டு பேசுகிறார் ஆனால் இருக்கையில் அமர்ந்திருப்பது அவரது கணவரும் திமுக பிரமுகருமான கருணா அவர்கள் இருக்கையில் அமர்ந்து பணம் கேட்பதும் அங்கே உடன் இருந்தவர்களில் ஒருவர் வட்டத் துணைசெயலாளர் எனவும் தெரிய வருகிறது.
தீரத்துடன் வாக்குவாதம் செய்து பணம் தரமுடியாது என உறுதியாக நின்றதோடல்லாமல் இந்த அராஜகத்தை துணிந்து வீடியோ எடுத்து பொதுமக்கள் அறியச்செய்த திருமதி தேவி அவர்களுக்கு மய்யத்தமிழர்கள் தனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளும் அதன் நிர்வாகமும் ஆளும் கட்சியின் கைகளில் இருந்தால் மட்டுமே மக்களுக்கான திட்டப்பணிகள் எந்த சுணக்கமும் இல்லாமல் சிறப்பாக நடக்கும் என்பது கண்கட்டு வித்தை என்பதை உணராத மக்கள் மீண்டும் இலவசத்திற்கும் பணத்திற்கும் நப்பாசை கொண்டு மீண்டும் செப்படி வித்தைக்காரர்களின் பொய் வாக்கினை நம்பி இதுவரை செய்த அதே தவறை செய்து கொண்டதன் பலனை அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரண சம்பவம். நீண்ட நெடுந்தொடர்கள் போல இன்னும் வரும் என்பதாய் நீளும் புதிய புதிய அத்தியாயங்கள் திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த நெடுந்தொடர்கள் அதற்காவது சனி ஞாயிறு என்று விடுமுறை உண்டு ஆனால் இவர்களின் அராஜகத்திற்கு விடுமுறைகள் இல்லை எந்த விதிமுறைகளும் இல்லை.
இத்தனை வருடங்களாக தன்னை தனது திரையுலக திறமையை மெச்சி கொண்டாடி உயரத்தில் வைத்திட்ட இத்தமிழக மக்களுக்காக தனது எஞ்சிய வாழ்வை தரும் பொருட்டு தடம் பிறழாத நேர்மை அரசியல் செய்யும் கட்சியான மக்கள் நீதி மய்யம் மூலம் நிச்சயம் மாற்றம் வரும் என்று உழைக்கும் அனைவரும் கூறும் நல்வார்த்தை நாளை நமதே.