குமாரபாளையம் ஆகஸ்ட் 16, 2022

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியைசேர்ந்த குப்பாண்டபாளயம் பேருந்து நிழற்கூட தளம் அமைத்துத் தரவேண்டும் என்று கிராம சபையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கலந்து கொண்ட நகர செயலாளர் திருமதி சித்ரா பாபு அவர்களின் கோரிக்கையை ஏற்று நிழற் கூட தளம் ஊராட்சி மன்றம் மூலமாக அமைக்கப்பட்டது.

தொடர்ந்து வலியுறுத்தி வந்ததற்கு பலன் கிடைத்துள்ளது. இதற்காக சித்ரா பாபு மற்றும் நமது மய்யம் சார்ந்த உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.