குரோம்பேட்டை, ஆகஸ்ட் 17 2022

இந்திய சுதந்திர தினத்தன்று சென்னை குரோம்பேட்டையில் மாநகரப் பேருந்து ஒன்றில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானார் அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியான செல்வி லட்சுமி பிரியா.

இந்த கொடூர மரணத்திற்கு காரணமாக அமைந்தது சாலையின் இருமருங்கிலும் வரம்பு மீறி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளால் போக்குவரத்திற்கு இடையூறாக நெடுங்காலமாக இருந்து வந்தது கண்டு பல சமயங்களில் பொதுநலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களும் பல முறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் அளித்தும் அவர்கள் ஏனோ பாராமுகம் காட்டி அப்பகுதியில் கடைகள் அமைத்துள்ளவர்களுக்கு சலுகை காண்பிக்கும்படியாக நடந்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நடந்த விபத்தில் மேற்சொன்ன மாணவியின் மரணம் நிகழ்ந்து விட்டது பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் மாநிலச் இணைச் செயலாளர் திரு தினேஷ் பாஸ்கர் அவர்களும் தொடர்ச்சியாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு அழுத்தம் தந்ததன் பயனாக புல்டோசர் இயந்திரமும் மாநகராட்சி களப்பணியாளர்களும் இணைந்து சாலையின் இருமருங்கிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கையும், நிர்வாகியின் தொடர்முயற்சியின் காரணமாக மாணவியின் உயிரைப் பறிக்க ஏதுவாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது வெற்றியே.

மய்யத்தமிழர்கள் – இணையத்தில் ஆகஸ்ட் 16, 2022 அன்று வெளிவந்த முந்தைய கட்டுரை உங்கள் பார்வைக்கு :