தேனி, செப்டம்பர் 28 – 2022
கல்வி என்பது தம் அறிவை விஸ்தீரணம் செய்வதும், பிறருக்கு கற்பிக்கவும், கற்பவர்களை, கற்றவர்களை ஒன்று சேர்க்கவும், ஒன்று சேர்ந்ததை கொண்டு கல்லாமை இருளைக் களையவும் என்பதே உண்மை.
கற்பதற்கு கட்டணம் என்பது செய்யும் செலவல்ல முதலீடு. இல்லாமையினால் வீழ்ந்துள்ள இல்லமும் கற்பதனால் உயர்வடையும்.
டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் பலர் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருப்பவர்கள் அல்லது சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் இருப்பவர்கள் மையங்களில் இணைந்து பயிற்சி பெற இயலாமல் போகும் அவர்களின் தேர்வு கனவும் அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் அரசுப் பணி கிடைக்கும் என்ற எண்ணமும் தடைபட்டு போகும்.
அப்படி ஓர் நிலை அத்தேர்வர்களுக்கு ஏற்படக் கூடாது என தேனி மாவட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் ஸ்பெக்ட்ரா அகாடமியும் இணைந்து டி என் பி எஸ் சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க முன்வந்திருக்கிறார்கள்.
கல்வியின் பயன், சிறப்பு என்ன என்பது நமது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் பல மேடைகளில் மற்றும் பல சந்தர்ப்பங்களில் விளக்கமாக கூறி இருக்கிறார். பலரை கற்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டும் இருக்கிறார். கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் வாயிலாக அதன் உறுப்பினர்கள் நிர்வாகிகள் என பலரையும் கல்விக்கு உதவிடும் வாய்ப்பு கிடைக்கும் என்றால் உங்களால் இயன்ற அளவில் கூட உதவிட முடியும் என்றால் அதனால் என் மனமும் மகிழ்ச்சி அடையும் என்பார்.
தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழியே என்பதாய் மக்கள் நீதி மய்யம் – தேனி துணை மாவட்ட செயலாளர் திரு மனோஜ் பிரபாகர் அவர்களின் சீரிய முயற்சியில் ஸ்பெக்ட்ரா அகாடமியுடன் இணைந்து இலவச பயிற்சியை நம் தேசத்தந்தை உயர்மிகு மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் நடக்கவிருக்கிறது.
இந்த சேவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது எனவே தேவை இருப்பவர்கள் அவசியம் பங்குகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாள் : 02.10.2022 இடம் : மக்கள் நீதி மய்யம் – தேனி தலைமை அலுவலகம் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் : திரு மனோஜ் பிரபாகர் M.E (மாவட்ட துணைசெயலாளர் ம.நீ.ம & இயக்குனர் – ஸ்பெக்ட்ரா எஜுகேஷனல் அகாடமி, தேனி (முழுத்தகவலுக்கு அறிவிப்பு இணைக்கப்பட்டுள்ளது)
பின்குறிப்பு : மேற்கண்ட சேவையை பெற விரும்புவோர் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்டுகிறது