தூத்துக்குடி, செப்டம்பர் 28, 2022

சொன்னது ஒன்று செய்வது வேறாக என திமுகவின் தமிழ்நாடு அரசு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அறிவித்த மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் மக்கள் நீதி மய்யம் கட்சியினர்.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் மக்களிடம் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் முன்பிருந்த நிலைக்கு திரும்பப் பெற வேண்டும் என்றும் திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்த மாதா மாதம் மின் கணக்கீடு செய்யும் முறையை அமல் படுத்தக் கோரி நூதன முறையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கையெழுத்து இயக்கம் ஒன்றை துவக்கி பொது மக்களிடம் மனுக்களையும், கோரிக்கைகளையும் பெற்றுக் கொண்டு அதனை முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பி வைக்க ஏதுவாக தொடர்ந்து களத்தில் இயங்கி வருகிறார்கள்.

மக்களுக்காக மக்கள் பணியில் ம. நீ. ம என்றும் துணை நிற்கும் என்று பேசிய மாவட்ட செயலாளர் திரு. ஜவஹர் ரவிசந்திரன் (R. ஜவஹர்) தலைமையில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் மக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறார்கள்.

அயராது உழைக்கும் ம. நீ. ம கள வீரர்களுக்கு மய்யத்தமிழர்கள் உளமார்ந்த வாழ்த்துகள் தெரிவிக்கிறது.