சென்னை – நவம்பர் 16, 2022
சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கருத்தரங்கம் ஒன்றில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான திரு கமல்ஹாசன் அவர்கள்.
அங்கு வருகை தந்திருந்த மாவட்ட செயலாளர் உடன் முக்கியமாக பல ஆலோசனைகள் நடைபெற்றது என தெரிய வருகிறது. உள்கட்டமைப்பு விவகாரங்களையும் கட்சியை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனைகளையும் மற்றும் அதன் நுட்பங்களையும் கொண்டு விவாதிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் பல அணி உள்ளன, அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் நிரப்பப்பட வேண்டிய பொறுப்பாளர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் 2018ம் ஆண்டில் கட்சி துவக்கப்பட்டதிலிருந்து நான்கு தேர்தல்களை களம் கண்டு போட்டியிட்டு இருக்கிறது. அதாவது பாராளுமன்றம், சட்டமன்றம், ஊராட்சி மற்றும் நகராட்சி உங்கள் தேர்தல் என நான்கு நான்கு முறை போட்டியிட்டுள்ளது. இதில் மற்ற மூன்று தேர்தல்கள் தவிர்த்து 2021 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மட்டும் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. இத்தேர்தலில் தமிழம் முழுக்க ஏறத்தாழ பல இடங்களில் மூன்றாவது இடத்திலும் நான்காவது இடங்களிலும் வாக்குகளை கணிசமாக பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பொதுமக்களில் வெகு பலர் அபிமானம் கொண்டுள்ளதாக அறிய நேர்ந்தது. தமிழகம் முழுக்க பரவலாக பல முக்கிய கட்சிகள் வாக்குகள் பெற குறுக்கு வழியான பணம் பொருள்கள் கொடுத்து தமது ஓட்டுக்களை பெற்றுக் கொண்டது அப்பட்டமாக அனைவருக்கும் தெரியும். வெற்றியின் விளிம்பிற்கு வந்த தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வஞ்சத்தினால் தோல்வியை அடைய நேர்ந்தது. தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் அத்தொகுதியைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது இந்த தோல்வி எதிர்பாராதது என்றும் நிச்சயம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் எங்கள் சார்பாக சட்டமன்றத்திற்கு சென்றிருந்தால் மிகச் சிறந்த விவாதங்களை முன் வைத்திருப்பார் என்றும் மக்களுக்கு சேவை செய்ய சற்றும் தயங்கிட மாட்டார் என்றும் கூறினார்கள்.
இதனை அடுத்து தோல்வி அடைந்த சுவடில்லாமல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தத்தமது பணிகளில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள் என்றால் மிகையாகாது. இதன் அடிப்படையில் பார்த்தோமானால் பல பகுதிகளில் மோசமான நிலையில் இருக்கும் பல பொது பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டு அதனை சீர் செய்ய வேண்டி குறிப்பிட்ட அரசு துறைகளின் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்தும் அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்தும் சமூக அக்கறையுடன் பொதுச் சேவைகளை செய்து வருகிறார்கள்.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பேசிய தலைவர் “நான் வேறு வழியில்லாமலோ அல்லது பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு வரவில்லை, 63 வருடங்களாக திரையுலகில் பணமும் புகழும் மக்களின் பேராதரவில் கிடைத்தது இன்னும் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. என்னை அவர்களின் மனதில் அசையாத ஓரிடத்தில் வைத்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு வெறும் கேளிக்கையை மட்டுமே அதற்கு பரிசாக கொடுத்துக் கொண்டிருப்பது மட்டுமே மக்களுக்கு நான் செய்யும் கைம்மாறு அல்ல, நற்பணியும் எனது சொந்தப்பணத்தில் இருந்து நான் செலவு செய்துவந்தாலும் ஆனது ரசிகர்களாகிய என் ஆத்மார்த்த உறவுகள் தங்களின் ஒவ்வொரு ரூபாயையும் நற்பணிக்கே தங்களால் இயன்றவரை செய்துவருகிறார்கள். இவற்றை எல்லாம் விட மக்களுக்கு இன்னும் செய்ய வேண்டுமென்றால் அரசு ரீதியான மக்களின் பிரதிநிதியாக பதவி இருக்குமெனில் அது சாத்தியமாகும். எனவே தான் கட்சியில் இணைவதோ அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு தரவும் இல்லை.
ஆதரவு தருமளவிற்கு தகுதி வாய்ந்த கட்சிகள் எதுவும் இங்கு இல்லை என்பதே உண்மை அதனை சீர்செய்யும் எண்ணமும் உள்ளே உருவானதால் தான் இந்த கட்சியான மக்கள் நீதி மய்யம் உருவானது, அதிலிருந்து பல தேர்தலில்களில் பங்குகொண்டு வெற்றியை தவற விட்டிருந்தாலும் மக்களின் நம்பிக்கையை சிதைக்காமல் கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிய நாம் தற்போது ஐந்தாம் வருடத்தில் நடந்து வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.
இதற்கிடையில் பிறந்தநாள் விழாவினை அடுத்து பதினாறாம் தேதியன்று மாவட்டச் செயலாளர்களுடனான கலந்தாலோசனையில் “இனியும் வரும் காலங்களில் கட்சியின் மீதான என் அக்கறையும் மக்களின் மீதான பற்றும் எந்த அளவிலும் குறையாது, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் பல இடங்களில் குறிப்பிடும் வாக்குகள் பெற்றோம். இன்னமும் நாம் நமது இலக்கினை அடையவேண்டும் என்றால் உழைக்க வேண்டும் எனது உழைப்பினை தந்து கொண்டே இருப்பேன் நமது கட்சியை இன்னமும் அதிக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய அவசியம் கருதி அதற்காக நீங்கள் என்னுடன் எந்த பாகுபாடும், ஒருவருக்கிடையில் மற்றவருடன் எந்தப் பிணக்கும் இல்லாமல் இணைந்து ஒத்துழைத்து அடுத்தடுத்த படிகளுக்கு முன் செல்வோம், தனித்து தேர்தல் களம் காண்பதும் அல்லது சென்ற காலத்தில் செய்த சிறு பிழையை மீண்டும் செய்துவிடாமல் பலமான போட்டியாளராக களம் காண கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமும் உங்களின் அடுத்தகட்ட கட்சிப்பணிகளில் உள்ளது” எனும் ரீதியாக பேசினார்.
அதைத் தவிர்த்து தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தீர்மானமாக எந்தவித அறிவிப்பினையும் வாய்மொழியாகவோ அல்லது அறிக்கை மூலமாகவோ கொடுக்கவில்லை என்பதே உண்மை
எனினும் நாளிதழ்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் இணையத் தளங்கள் அவரவர் விருப்பதிற்கென செய்திகளை முந்தித் தருகிறார்கள் என்றால் மிகையாகாது. கணிப்புகள் பல வேளைகளில் பொய்த்துப் போன வரலாறுகளும் உண்டு.