சென்னை – நவம்பர் 22, 2௦22

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென சிறப்பு பேருந்துகள் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் மாணவரணி மாநில செயலாளர் திரு ராகேஷ் குமார் ராஜசேகரன் அவர்கள் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களிடமும் போக்குவரத்துத்துறை அமைச்சரான திரு சிவசங்கர் அவர்களிடம் மனுக்களை அளித்தார்.

அரசு பள்ளி மற்றும் கல்லூரி செயல்படத் துவங்கும் காலை வேளைகளில் பயணம் செய்யும் மாணவ மாணவியர் அரசு பேருந்து வழித்தடங்களை உபயோகம் செய்கிறார்கள். அதே வேளையில் பொதுமக்கள் பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்கின்றபோது கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

அவ்வேளைகளில் ஏற்படும் கடும் நெருக்கடிகளில் பேருந்திற்கு வெளியிலும் படிக்கட்டுகள் மற்றும் பக்கவாட்டு ஜன்னல் ஓரங்களில் உள்ள கம்பிகளை பிடித்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பல மாணவர்கள் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. மகளிற்கென சிறப்புப் பேருந்துகள் இயக்குவது போன்று இதற்கான தீர்வாக அரசு போக்குவரத்து கழகம் போதுமான அளவில் பேருந்துகளை இயக்க முன்வர வேண்டும்.

வீட்டிலிருந்து புறப்பட்டு பயணம் செய்து வகுப்பறைகளில் அமர்ந்து கல்வி கற்க நேரும்போது மனதில் எந்த பரப்பரப்பும் இன்றியும் நிம்மதியான மன நிலையுடன் இருப்பது நல்லது. மக்களுக்கு செயப்படும் எந்த திட்டங்களும் அவர்களுக்கு முழுமையான பயனை தர வேண்டும். குறிப்பாக இன்றைய கல்வி கற்கும் மாணவர்களின் நலனையும்அவர்களின் விலைமதிப்பற்ற உயிரையும் காக்கும் பொருட்டு திட்டங்கள் செய்தால் நாளைய தலைமுறை தன்னிறைவு பெரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

மாணவர்கள் இன்றைய விதை நாளைய விருட்சம் !