சென்னை – டிசம்பர் 31, 2௦22

மக்கள் நீதி மய்யம் மூலமாக வாராந்திர இணையவழி பயிற்சிப்பட்டறை தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனையின்படி நடந்து வருகிறது. அதன்படி சனிக்கிழமையான நேற்று 31.12.2௦22 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இந்த பயிற்சிப்பட்டறையின் சிறப்பு அழைப்பளாராக திருவனந்தபுரம், டாக்டர் சோமர்வேல் மருத்துவக் கல்லூரியின் முதல்வரான திரு T. ஜெயராஜசேகர் அவர்கள் நீர் மேலாண்மை மீளுருவாக்கம் செய்யும் முனைப்பினில் பயணித்துக் கொண்டிருக்கும் பற்றிய முனைப்பில் இருக்கும் இவர் கலந்துரையாடினார்.

தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “நீர் மேலாண்மை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளவும் ! – மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.