சென்னை : ஜனவரி 18, 2023

உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் யாவருக்கும் பொதுவான ஓர் பண்டிகை பொங்கல் திருவிழா. தை மாதம் முதல் நாளன்று கொண்டாடப்படும் இவ்விழாவின் சிறப்பு என்பது வேளாண்மையை, அதனை எந்த இக்கட்டிலும் விடாமல் தொடரும் உழவர்களை, கால்நடைகளான மாடுகள், காளைகள் என கௌரவிப்பதும் ஆகும்.

தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க பொங்கல் திருவிழாவினை எந்த சாதி பாகுபாடும் மனதில் கொள்ளாமல் சமத்துவமாக கொண்டாடும் பொருட்டு மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் தலைவரின் விருப்பபடியும் ஆலோசனைப்படி நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நேற்று (17.01.2023) சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர்.

மகளிர் அணியினர் உடன் தூய்மைப் பணி தோழர்கள் மற்றும் திருநங்கையர் ஆகியோர் பொங்கல் வைத்து விழாவினை சிறப்பித்தனர்.