புது தில்லி ஜனவரி 24, 2023

இந்தியா என்பது பல மாநிலங்கள் ஒன்றிணைந்துள்ள ஓர் நாடு. இதில் பலதரபட்ட மொழிகள் மாநிலங்கள் வாரியாக பேசவும், எழுதவும் கற்கவும் மற்றும் கற்பிக்கப்படுகிறது. தென்னிந்தய மொழிகளாக பெரும்பான்மையாக பேசப்படும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா என முறையே தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

ஆயினும் நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் இயங்கும் நீதிமன்றங்கள் மற்றும் அனைத்திற்கும் மேலான உச்சநீதிமன்றம் வரையில் வழக்காடு மொழியாக ஆங்கிலம் மட்டுமே தொடர்ந்து பெரும்பங்கு வகித்து வருகிறது. மாநில மொழிகளில் வழக்காட வழிவகை இல்லை என்றபோதும் பெரும்பாலான மக்கள் ஏகோபித்த விருப்பமாக அவரவர் மாநில வழக்குமொழியில் இருக்கும்பட்சத்தில் புரிந்துகொள்ள பேருதவியாக இருக்கும் எண்ணம் மேலோங்கி இருப்பது தெளிவாக அறியலாம். அதன்படி பார்த்தோமானால் பொதுவாக நிலவும் எண்ணத்தினை பிரதிபலிக்கும் வகையில் அதனை ஒத்த வகையில் குறிப்பிட்டு தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு டி.ஒய். சந்திர சூட் அவர்கள் அற்புதமான கருத்து ஒன்றை மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழிச்சியில் பேசியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது. அவர் பேசியதாவது உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியானதும் அவற்றை மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் மேலும் அதற்கான வழிவகைகளை முன்னெடுக்க விருப்பதாகவும் கூறியிருப்பது கண்டு அவரது யோசனையை மற்றும் அதற்கான செயலில் ஈடுபட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது அதே சமையம் அந்தந்த மாநிலங்களில் அமைந்துள்ள நீதிமன்றங்களில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளும் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழியில் அமைய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் என அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.டி.ஒய்.சந்திரசூட் அவர்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும், இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதியின் இக்கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது. நீதிமன்ற நடைமுறைகளையும், தீர்ப்புகளையும் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும், அவரவர் மொழியில் அறிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதேபோல, உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக, அந்தந்த மாநில மொழிகளே இருக்க வேண்டுமென அறிவிப்பதும் அவசியமாகும். எனவே, சாதாரண மக்களும் நீதிமன்ற நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ளும் வகையில், மாநில மொழிகளைப் பயன்படுத்தும் நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது.மக்கள் நீதி மய்யம்

Speaking at a programme hosted by the Marathi and Goa Bar Councils, Supreme Court’s Chief Justice D.Y Chandrachud stated that Supreme Court’s judgments should be translated into state languages and that steps are being taken to accomplish this.

The Chief Justice of India’s point of view is greatly appreciated as Makkal Needhi Maiam had always insisted that people in all parts of the country be able to understand court procedures and judgments in their native language. This should be implemented right away.

Similarly, it is necessary to declare that the respective states’ languages should be the language of litigation in the High Courts.

Hence, MNM advocates for the immediate implementation of the practice of using state languages in High Courts so that ordinary people can understand court proceedings.Makkal Neethi Maiam

மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் – மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களின் முன்னெடுப்பிற்கு மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் வரவேற்பு.