சென்னை : ஜனவரி 25, 2௦23

தேசிய வாக்காளர் தினம் இன்று நாடு முழுவதும் நினைவு கூறப்படுகிறது. தேர்தலில் தாம் செலுத்தும் வாக்கு ஒன்றே மிகச் சிறந்த அறமாகும் அகிம்சையின் ஆயுதங்களில் மிக முக்கியாமான ஒன்றாகும் எனவே அதனை தவறாமல் செலுத்திட வேண்டுமாய் மக்கள் நீதி மய்யம் இத்தினத்தில் கேட்டுக்கொள்கிறது.

18 வயதைப் பூர்த்தியடைந்த ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் வாக்குரிமை. தன்னை யார் ஆளவேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை மகத்தானது. முடிவெடுக்கும் நாளில் ஒன்று கூடாவிட்டால், வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றாவிட்டால் பல உரிமைகளை இழக்க நேரிடும் வாக்குரிமையின் வலிமையை உணர்வோம். ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் வாக்களிப்போம். தேசிய வாக்காளர் தின வாழ்த்துகள்.. – மக்கள் நீதி மய்யம்