சென்னை : ஜனவரி 23, 2௦23

இந்திய தேச விடுதலைக்காக ஆங்கிலேயரிடம் அஞ்சாமல் மறம் கொண்டு போரிட்டு எதிர்த்து நின்ற மாவீரர் திரு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் இன்று. அவருடைய நெஞ்சுரம் கண்டு பதறிய பிரிட்டிஷ்காரர்கள் அவரை வீழ்த்திவிட நினைத்தார்கள். எனினும் அதை அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அத்தைகைய வீரனாக திகழ்ந்த நேதாஜி அவர்களின் பெயரை சூட்டினால் கூட அவர்களும் வீரம் செரிந்தவர்கள் ஆகிறார்கள். இந்நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது தெள்ளியத் தமிழால் சொற்களால் அலங்காரம் செய்துள்ளார் ஓர் அழகிய வாழ்த்துச்செய்தி எனும் வடிவில்.

அறம் எங்கே செல்லுபடியாகும் என்று யோசித்து, இந்திய விடுதலைப் போரில் மறம் என்கிற ஆயுதத்தை ஏந்தி வீரம் காட்டியவர் நேதாஜி என உயர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். அவரது 126 ஆவது பிறந்த நாளில் அவரது வீரத்தைப் போற்றுவோம்.திரு கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம