மார்ச் ௦5, 2௦23

குழந்தையாக வளரும் பருவம் முதல் பள்ளிப்படிப்பு நுழைந்து அதில் படிப்படியாக கற்றுத் தேர்ச்சியடையும்போது யாரேனும் உங்களிடம் கேட்பார்கள் படிச்சு பெரியாளாகி என்னவாகப் போறே என்று அல்லது மாநில அரசு பணியில் சேரப் போகிறாயா அல்லது மத்திய அரசுப்பணியில் சேர பயில்கிறாயா என்று.

இதென்ன கேள்வி பட்டப்படிப்புகள் பல உள்ளதே மத்திய மாநில அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து அதற்கான தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெரும் பட்சத்தில் அரசு பணி கிடைக்கும் இதில் என்ன சந்தேகம் என்று எதிர்கேள்வி கேட்கும் உங்களிடம் ஓர் விளக்கம்.

அதாவது தமிழ் நாட்டின் உயர்கல்வித்துறை மிக முக்கியமான ஓர் கேள்வியை அல்லது அதிர்ச்சியளிக்கும் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழகம் உட்பட பல கல்வி இயக்ககங்கள் இதுவரை அளித்துவந்த பட்டப்டிப்புகளில் கிட்டத்தட்ட 21 பட்டப்படிப்புகள் அரசுப் பணியில் சேரத் தகுதியற்றதாக கூறப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

21 பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு ஏற்றதல்ல – உயர்கல்வித் துறை அரசாணை வெளியீடு | 21 Degree courses not suitable for government jobs – Higher Education Department Ordinance Issue – hindutamil.in