சென்னை : ஏப்ரல் 13, 2023

இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்கள் பெரிதும் போற்றப்படும் ஓர் அற்புத தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி எனும் படியாக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்க்கும் பொதுவான சட்டங்களை வகுத்து வரையறை செய்து முடித்தவர். ஒருசாரார் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாத மேதையாக திகழ்ந்தார் என்றால் மிகையாகாது. அவரது 132 ஆவது பிறந்த நாள் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. அண்ணல் அவர்களைப் பற்றி மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பாகுபாடு, உயர்வு தாழ்வு கூடாது என்பதைத் தம் கொள்கைகளின் அடிநாதமாகக் கொண்டு அந்தக் குறிக்கோளை எட்டுவதற்கான வேலைகளை ஆழமாகவும் அகலமாகவும் செய்து வைத்துவிட்டுப் போயிருக்கும் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளில் அன்னாரின் பாதையில் நடக்க உறுதியேற்போம்.”திரு கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வடகோவை பவர்ஹவுஸ் அருகில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு துணைத்தலைவர் திரு தங்கவேலு அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. #AmbedkarJayanti2023 – நன்றி – மண்டல அமைப்பாளர், மக்கள் நீதி மய்யம் (IT-WING)

Last Updated 18-Apr-23