கோவை : ஜூலை 16, 2௦23
கடந்த 2௦21 ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் போட்டியிட்டார். பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பிலும் போட்டியிட்டவர்கள் முறையே திருமதி வானதி ஸ்ரீநிவாசன், திரு மயூரா ஜெயகுமார் ஆகியோரும் களத்தில் இருந்தனர். தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசிய பிஜேபி வானதி, கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தந்திடும் வகையில் அவற்றை சிரமேற்கொண்டு செய்திடும் வகையில் தயாராக இருந்த திரு கமல்ஹாசன் எதிர்பாராத வகையில் சில சூழ்ச்சிகளால் தோற்க்கடிக்கப்பட்டார். ஆயினும் அத்தொகுதியில் பெண்கள் பயிலும் அரசு பள்ளியில் காற்றின் மூலம் தண்ணீர் உற்பத்தியாகும் கருவி, வேறொரு உடற்பயிற்சி கூடத்திற்கு அதற்கான இயந்திரங்கள், சில இடங்களில் பள்ளிகளின் கழிப்பறைகள் புதுப்பித்தல் போன்ற சில திட்டங்களை பெரும்பான்மையாக தன் சொந்த செலவிலும் செய்து தந்துள்ளார். கோவை தெற்கில் கெம்பட்டி காலனி எனும் பகுதியில் நான்கு இலவச கழிப்பறைகள் கட்டித்தர அரசின் உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது மக்கள் நீதி மய்யம் கட்சி. இதனிடையே தமிழ்நாட்டிலும் மற்றும் அயல்நாட்டிலும் உள்ள தனது ஆதரவாளர்கள் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் மூலமாகவும் இன்னும் சில நலத்திட்டங்களை செய்து தருவதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற திருமதி வானதி தான் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அளவில் வகிக்கும் பதவியினை காரணம் காட்டி பல மாநிலங்களுக்கு கட்சிப் பணி நிமித்தமாக கலந்து கொள்ள சென்று விடுகிறார். வானதி அவர்கள் அளித்த நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட ஒற்றை எண்ணிக்கை அடிப்படையில் கூட எதையும் நிறைவேற்றிடவில்லை குறிப்பாக 1) இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 15௦௦, 2) வருடத்திற்கு 6 விலையில்லா சமையல் எரிவாயூ சிலிண்டர், 3) அனைவருக்கும் விலையில்லா சோலார் அடுப்பு மற்றும் வாஷிங் மெஷின், 4) அனைத்து வீடுகளுக்கும் கேபிள் திட்டம், 5) குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என எதையும் இதுவரை ஒருவருக்கு கூட செய்ததாக எந்தத் தகவலும் இல்லை என்ற ஆதங்கம் தொகுதி மக்களிடையே பரவலாக எழுந்து வருகிறது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கோவை மாவட்ட நிர்வாகிகள் இவற்றை மாநிலத் தலைமைக்கு எடுத்துச் சென்றதும் தலைவரின் ஒப்புதலோடு மேல்மட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு ஜூலை 16 ஆம் நாளான இன்று சட்டமன்ற உறுப்பினரான திருமதி வானதி அவர்களை நோக்கி பல கேள்விகளை எழுப்பி கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை உக்கடம் பகுதியில் வள்ளியம்மை பெக்கரியின் எதிர்புறம் காலை 11 மணியளவில் துவக்கி பெருந்திரளான மக்கள் மத்தியில் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் திரு கவிஞர் சிநேகன் உரையை துவக்கியும், கட்சியின் துணைத்தலைவர்கள் மற்றும் இதர அணிகளின் மாநில செயலாளர்களும் நிர்வாகிகளும் இணைந்து வாக்குறுதிகளை நிறைவேற்றித் தராமல் இழுத்தடிக்கும் திருமதி வானதி அவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.
#வானதிஎங்கே_வளர்ச்சிஎங்கே #வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே
#வானதிஎங்கே_வளர்ச்சிஎங்கே #வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே
#வானதிஎங்கே_வளர்ச்சிஎங்கே #வானதிஇங்கே_வாக்குறுதிஎங்கே