ஈரோடு மாவட்டம் : மார்ச் 29, 2024

புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 31, 2024

நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதை ஈரோட்டில் இருந்து துவங்கினார். முதலில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெப்படை போன்ற பகுதிகளில் திரவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு.K.E.பிரகாஷ் (ஈரோடு மக்களவை தொகுதி) அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அலைகடலென திரண்டிருந்த மக்களின் முன்னே “நாம் நம் நாட்டை நேசிக்கிறோம் நமது மண்ணை நேசிக்கிறோம் நமது சக மக்களை மனிதர்களை நேசிக்கிறோம் இவற்றை தொடர்ந்து பேணிக் காத்திட மதவாதம் பேசும் ஆட்சியை, மக்களின் நலிந்து வரும் பொருளாதாரம் சீர் செய்யாமல் தனது நண்பர்களுக்கு உதவி செய்திடும் ஓர் எதேச்சதிகார கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றும் ஓர் வாக்குப் புரட்சியை முன்னெடுத்துள்ளோம், எனவே அதை நம் மனதில் கொண்டு இண்டியா கூட்டணிக்கு நமது வாக்குகளை அளித்து பிரகாசமான ஆட்சியை கொண்டுவர தயாராகிடுவோம் என அதிரடியாக பேச துவங்கி அடிப்படை அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி முதல் தொட்டு அனைத்தையும் ஒரு பிடி பிடித்தார் எனலாம், அனல் தெறித்த முழு நீள காணொளியின் இணைப்பு உங்களின் பார்வைக்கென இணைக்கப்பட்டுள்ளது.

https://www.instagram.com/p/C5FhBj7vPWw/?igsh=a2Y5dDd6c3Rxejc5