சென்னை – மார்ச் 31, 2024

நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. எனினும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக மார்ச் 29 ஆம் தேதியன்று ஈரோட்டில் இருந்து துவங்கினார். அடுத்தகட்டமாக வருகின்ற ஏப்ரல் 02 தேதியன்று பெரம்பலூர் மாவட்டத்தில் தனது பிரத்யேக தேர்தல் பரப்புரையை தொடரவிருக்கிறார். ஈரோட்டைப் போன்றே பெரம்பலூர் மாவட்ட மக்களும் பெரும் திரளாக கலந்துகொண்டு நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அதிரடி பரப்புரையை காணவும் கேட்கவும் மக்கள் நிச்சயம் ஒன்று கூடுவார்கள். பெரம்பலூர் மாவட்ட மக்களே தயாராகுங்கள் நேர்மைத் தலைவரின் பேருரையை கேட்க, அவரின் வேண்டுகோளிர்கேற்ப இண்டியா கூட்டணிக்கு உங்கள் வாக்குகளை செலுத்தி வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறது மய்யத்தமிழர்கள்.