சென்னை : மார்ச் 31, 2024

பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகள் முதல் ஆட்சி செய்த ஆளும் மாநிலக் கட்சி உட்பட தங்கள் அணியில் பலரையும் இணைத்துக்கொண்டு தத்தமது கூட்டணியை பலப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்றும் அடுத்து வந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தும் கணிசமான வாக்குகளை பெற்றது மக்கள் நீதி மய்யம். அது மட்டுமில்லாது பெரும்பான்மையான தொகுதிகளில் நான்காம் இடம்பிடித்தது ஆகப் பெரிய சங்கதி என்பதும் அப்படி கணிசமாக பெற்ற வாக்குகள் அனைத்தும் எந்த அன்பளிப்பும் அல்லது ஒற்றை நயா பைசாவும் பொதுமக்களுக்கு அளிக்காமல் பெற்ற வாக்குகள் என்பதும் உண்மை. இதற்கான அனைத்து பெருமையும் தலைமையும் அவர்கள் அரவணைத்துச் சென்று தலைவரின் ஆலோசனையின்படி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களையே சாரும். மேலும் மக்கள் நீதி மய்யம் மீது தமிழக மக்கள் பெருமதிப்பு கொண்டிருந்தனர் என்பதும் தெள்ளத்தெளிவாக அறிய முடிகிறது என்றால் மிகையாகா.

அதே மன ஓட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்றும் அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் பல அரசியலாளர்கள் (அரசியல் விமர்சகர்கள்) மூலமாக பலதரப்பிலும் பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருந்தது. அதற்கடுத்து தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் பல கட்டங்களில் கட்சியின் உயர்மட்ட குழுக்களான செயற்குழு, நிர்வாகக்குழு உள்ளிட்ட பல நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் நடந்து முடிந்தது. இறுதியாக கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரமும் தலைவருக்கு வழங்கப்படுவதாக ஏகமனதுடன் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதை அடுத்து இன்டியா கூட்டணிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இண்டியா கூட்டணியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பல முக்கிய அம்சங்கள் நிறைவேறின. என்னவெனில் மக்கள் நீதி மய்யம் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் லோக் சபா தொகுதிகளில் போட்டியிடவில்லை என்றும் அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் ஓர் சீட் பெற்றுக் கொள்வதாகவும் முடிவுகள் வெளியானது. எதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டது என இம்மாதம் மத்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே தெளிவாக விளக்கமளித்தார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக இண்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் பரப்புரை செய்யும் நிகழ்வுகள் பட்டியல் வெளியானது.

கிடைக்கும் சீட்களை பெற்றுக் கொண்டு தன்னால் அரசியல் செய்ய முடியும் என்பதும் ஆனால் அப்படி ஓர் சுயநலம் பேணும் ஓர் தலைவனாக தான் இருக்கப்போவதில்லை என்றும் முடிவு செய்ததால் முதலில் நாட்டைப் பார்ப்போம் பின்னர் நம் மாநிலத்தில் நடக்கும் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு பார்த்துக் கொள்ளலாம் என தான் வகுத்ததை தியாகம் என்று குறிப்பிடுவதை மறுத்து இது அரசியல் வியூகம் என்று சொல்லி சிரிக்கிறார் நம்மவர் தலைவர்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக எழுந்த அனைத்து விடயங்களையும் தொகுத்து ஓர் வார இதழ் கட்டுரையாக வெளியிட்டுள்ளது அதனை வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு இங்கே அந்த வார இதழுக்கு நன்றி சொல்லிக்கொண்டு பதிவு செய்கிறோம்.

நன்றி : ஜுனியர் விகடன் வார இதழ்