ஏப்ரல் : 05, 2024

நாடாளுமன்ற தேர்தலை முன்னோக்கி அரசியல் கட்சிகளின் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாராம் தமிழகம் முழுக்க நடைபெற்று வருகிறது, மக்கள் நீதி மய்யம் கட்சியும் இண்டியா கூட்டணியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. தேர்தலில் போட்டியிடாமல் ஆதரவளிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களுக்காக நம்மவர் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அவ்வகையில் நாளை மத்திய சென்னை தொகுதிகளில் அமைந்துள்ள துறைமுகம் மற்றும் அண்ணாநகர் ஆகிய இடங்களில் நாளை 06.04.24 மாலை 5 மணியளவில் துவங்கி பேசவிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. தயாநிதி மாறன் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, நாளை (06.04.2024) மாலை 5 மணிக்கு துறைமுகம் – மகாசக்தி ஓட்டல், மாலை 6.30 மணிக்கு அண்ணா நகர் – டி.பி.சத்திரம் பகுதிகளுக்கு வருகை தருகிறார்“. – மக்கள் நீதி மய்யம்

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முனைவர். திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க, நாளை (06.04.2024) மாலை 4 மணிக்கு மயிலாப்பூர் – அம்பேத்கர் பாலம் (சிட்டி சென்டர் அருகில்), இரவு 8 மணிக்கு விருகம்பாக்கம் – சாலிகிராமம்  பகுதிகளுக்கு வருகை தருகிறார்”.மக்கள் நீதி மய்யம்