திருபெரும்புதூர் : ஏப்ரல் 07, 2024

புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 08, 2024

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு இண்டியா கூட்டணி சார்பில் திமுகவின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சாரத்தில் பங்கு கொள்ளும் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் திருபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திரு. டி.ஆர். பாலு அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். நம்மவரின் ரசனையான உரையை கேட்க பெரும்திரளான மக்கள் அந்தந்த இடங்களில் கூடி நின்று கேட்டு ஆர்ப்பரித்து தமது உள்ளத்தின் கிடக்கை வெளிப்படுத்தினார்கள்.