சென்னை : ஏப்ரல் 07, 2024

(புதுப்பிக்கப்பட்ட பதிவு)

இண்டியா கூட்டணியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் முதல்வர் திரு.M.K. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமையபெற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் குறித்து அனைவரும் அறிந்ததே. அக்கூட்டணி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ம.நீ.ம வின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை நிகழ்த்தி வருகிறார். சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் இன்றைக்கு வடசென்னை, மத்தியசென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார் நம்மவர். செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதாக பெருந்திரளான மக்கள் பொறுமையாக நின்று நம்மவர் பேசுவதை உன்னிப்பாக கேட்கின்றனர்.

அதன்படி இன்றைக்கு திருபெரும்புதூர் பார்லிமென்ட் தொகுதியில் போட்டியிடும் திரு.T.R.பாலு மற்றும் வடசென்னையில் போட்டியிடும் டாக்டர் கலாநிதி அவர்களுக்கும் ஆதரவளித்து பிரச்சாரம் செய்யுமிடங்கள் நங்கநல்லூர், முகப்பேர் கலெக்டர் நகர், ஓட்டேரி பாலம், திரு.வி.க.நகர் மற்றும் ராயபுரம் சுழல் மெத்தை அருகில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசம் காக்க, ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம் !

ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரம் – நேரலை

நன்றி : மக்கள் நீதி மய்யம்


#சென்னையில்_நம்மவர்
#KamalHaasan #MakkalNeedhiMaiam #Election2024