பொள்ளாச்சி : ஏப்ரல் 15, 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணி சார்பாக திமுக, விசிக, மதிமுக, CPI, & CPI(M) ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்துவருகிறார். அதன்படி இன்றைக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியின் பகுதிகளுக்கு பிரச்சாரம் செய்யவிருப்பதாக இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு.

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. K. ஈஸ்வரசாமி அவர்களுக்கு, உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் பொள்ளாச்சி பேருந்து நிலையம், கிணத்துக்கடவு – பழைய பேருந்து நிலையம் மற்றும் தொண்டாமுத்தூர் – மாரியம்மன் கோயில் மைதானம் ஆகிய பகுதிகளுக்கு வருகை தருகிறார்.” – மக்கள் நீதி மய்யம்