ஏப்ரல் 05, 2024

நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இண்டியா கூட்டணியின் தமிழக கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பரப்புரை செய்து வருகிறார். அவ்வாறு இம்மாதம் கடந்த 03 ஆம் தேதி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்திடுகையில் “எனது அரசியல் எதிரி யார் என்பதை நான் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். எனது எதிரி தனிப்பட்ட நபர் என யாரும் இல்லை, ஆனால் எனக்கு எதிரியாக நான் எண்ணிக் கொள்வது சாதியம் தான்” என முத்தாய்ப்பு வைத்து பேசியதும் அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்களின் கரவோசையும் ஆமோதிப்பது போல் எழுந்த பெரும் ஓசையும் விண்ணைப் பிளந்தது எனலாம்.