ஜனவரி’ 16, 2025

இந்தியா சுதந்திரம் பெற்ற போது நிலவிய கடும் பஞ்சம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஒரு வேளைக்கான உணவினை கூட உண்ண முடியாமல் பசிப்பிணியால் அவதியுற்றனர். காலப்போக்கில் பஞ்சத்தினை போக்கிட சுதந்திரத்திற்கு பிற்பாடு அமையபெற்ற மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பியது இந்திய வேளாண்மை. இதன் முக்கிய காரணங்களாக பாடுபட்ட விவசாயிகளை சொல்லாமல் எப்படி இருக்க முடியும்.

உழவில்லையேல் எந்த நாடும் உணவு வளம் பெற முடியாது என்பது முற்றிலும் உண்மை. உணவுபொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு மத்தியில் உழவை தங்கள் உயிராக எண்ணும் இந்திய விவசாயிகள். உழவுத்தொழில் என்றாலும் அதனை எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் விட்டுவிடாமல் தொடர்ந்து வேளாண்மை செய்து வருகிறார்கள். எத்தனையெத்தனை போராட்டங்கள் நடைபெறும் போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரும் மக்கள் வெள்ளம் திரண்டு நிற்கிறது என்பதற்கு நம்மிடம் சாட்சியுண்டு. உழவன் சேற்றில் கால் வைக்கவில்லை எனில் நாம் சோற்றில் கை வைக்க முடியாது என்பதும் ஏறத்தாழ ஆண்டாண்டு காலமாக பேசிவரும் பழமொழியை போன்றது. நமது தாயை எவ்வளவு நேசிப்போமோ அந்தளவிற்கு உழவர்களை நிச்சயம் நேசிப்போம் அவர்களின் உழவினை தொழிலாக கொண்டிருந்தாலும் அவர்கள் செய்வது பெரும் சேவையே. எனவே அவர்குளுக்கான உச்ச பட்ச மரியாதையை ஆதரவை தருவது நமது கடமையென கொள்ளுதல் வேண்டும். வேளாண் மக்கள் போற்றப்பட வேண்டும் என்பதை நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்த போது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை.

‘பஞ்சப் பராரிகளின் நாடு’ என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள்.

‘நாட்டுப்புறத்தான்’ தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும் ; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள்.

உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள்.

திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம் & செய்திகள் சமூக ஊடகங்கள்