சென்னை : ஆகஸ்ட் 25, 2024

தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த திரு.விஜயகாந்த் அவர்கள் சக கலைஞர்களும் மக்களும் அன்போடு அழைத்த கேப்டன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பட சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் எனும் கட்சியை துவக்கி இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்வான போதும் எதிர்க்கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். நடித்து வந்தபோதும் அரசியல் தலைவராகவும் உருப்பெற்ற பின்னரும் நன்கொடைகள் செய்வதை என்றும் நிறுத்தியதில்லை என்பதை அவர் மறைந்த பின்னரும் அவரைப்பற்றி பலரும் வெகுவாக நினைவுபடுத்தி வருகின்றனர்.

அதே போன்று திரையுலகில் முக்கிய ஆளுமையாக திகழ்ந்து வரும் உலகநாயகன் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களும் 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கிய போது மரியாதை நிமித்தமாக கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களை சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார் திரு.கமல்ஹாசன் அவர்கள். அப்போது நம்மவரை வரவேற்று உபசரித்த கேப்டன் அவர்கள் மீதான தனது அன்பை என்றும் நினைவில் வைத்துள்ள தலைவர் அவர்கள் அவரது பிறந்தநாளான இன்று தமது வாழ்த்துகளை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன்.”திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

‘Name must be told whether it exists or disappears’: Kamal Haasan pays tribute to Captain Vijayakanth on his birth anniversary (msn.com)

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. விஜயகாந்துக்கு ஈபிஎஸ், கமல் வாழ்த்து..! – edappadi palanisamy and kamal hassan wishes vijayakanth birthday | Webdunia Tamil

On Vijayakanth’s birth anniversary: Kamal Haasan cherishes the fond memory of his friend | Tamil Movie News – Times of India (indiatimes.com)

நன்றி : ம.நீ.ம & ஊடக இணைய நாளிதழ்கள்/செய்தித்தளங்கள்