கோவை ஏப்ரல் 09, 2025

கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் 2026 ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கு கொள்ளும் வகையில் அதற்கான பணியில் நிர்வாகிகளை ஈடுபடுவதும், பூத் கமிட்டி அமைப்பதும், கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பதும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் என தொடர்ச்சியாக இயங்க வேண்டுமென ஆலோசனைகள் வழங்கியதன் பொருட்டு கோவை வடக்கு ம.நீ.ம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்பேரில், கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வடவள்ளியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் திரு.தனவேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள், பூத் கமிட்டி அமைத்தல், புதிய பொறுப்பாளர்கள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. முத்துமாரி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. பாலமணிகண்டன், மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. மாரியப்பன், திரு. ஆனந்த், மாவட்ட துணை அமைப்பாளர்கள் திரு. செல்வராஜ் (தொழிலாளர் அணி), திரு. பழனிசாமி (நற்பணி அணி), திரு. மகேஸ்வரன் (இளைஞரணி), மாநகரச் செயலாளர்கள் திரு. இளையபாரதி, திரு. A.K.B.பாபு, திரு. தண்டபாணி, திருமதி.சாந்தி, திரு. மோகன்ராஜ், வார்டு செயலாளர்கள் திரு. ரஞ்சித்குமார், திரு. ஐயப்பன் ராஜேஷ், நற்பணி அணி கிளைச் அமைப்பாளர் திரு. சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்