இராயபுரம் – ஏப்ரல் 29, 2025

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. தலைவரின் வழிகாட்டுதல்படி மாவட்டச் செயலாளர் திரு.கமல் மாறன் அவர்கள் தலைமை வகிக்க, கட்சியின் துணைத்தலைவர் திரு.மௌரியா அவர்கள் கட்சிக் கொடியேற்றி நீர் மோர் பந்தலைத் துவக்கி வைத்தார். நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், சென்னை, காஞ்சி & விழுப்புரம் மண்டல மகளிரணி செயலாளர் திருமதி.சினேகா மோகன்தாஸ், வழக்கறிஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு.சேகர், பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு.சரவணக்குமார், நம்மவர் பேரவை மாநில துணை அமைப்பாளர் திரு.மாடசாமி, வில்லிவாக்கம் மாவட்டச் செயலாளர் திரு.கமல் கோமகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இராயபுரம் தொகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, கட்சியின் இராயபுரம் மநீம மாவட்டத்திற்கு உட்பட்ட, பழைய வண்ணாரப்பேட்டை தங்கச் சாலையில் உள்ள வள்ளலார் பேருந்து நிலையம் அருகே இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு.கமல் மாறன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா (ஐபிஎஸ் – பணி ஓய்வு) அவர்கள் கட்சிக் கொடியேற்றிவைத்து, தண்ணீர் பந்தலைத் திறந்துவைத்தார்.

நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், மகளிரணி மாநிலச் செயலாளர் திருமதி.ஸ்னேஹா மோகன்தாஸ் (சென்னை, காஞ்சி, விழுப்புரம் மண்டலங்கள்), வழக்கறிஞர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சேகர், பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு. சரவணகுமார், நம்மவர் பேரவை மாநில துணை அமைப்பாளர் திரு. மாடசாமி, வில்லிவாக்கம் மாவட்டச் செயலாளர் திரு.கமல் கோமகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், துணைச் செயலாளர் P.கவிராஜ், மாவட்ட அமைப்பாளர்கள் திரு. சோலையப்பன் (ஆதிதிராவிட அணி), திரு J.ராம்சேகர் (தொழிலாளர் அணி), திரு O.ராஜா (சமூக ஊடக அணி), திரு. மோகன்பாபு (நற்பணி இயக்க அணி), திரு. சரவணன் (இளைஞர் அணி), திரு. மோகன்ஹாசன் (சமூக ஊடக அணி), திரு. பிரேம் (ஊடகம் – செய்தி தொடர்பு அணி), திருமதி D.ஜெயந்தி (மாணவரணி), திரு. M.V. முத்து (ஆதிதிராவிட அணி), மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. சந்துரு மற்றும் திரு. பாலகுரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மாநகர வார்டு செயலாளர்கள் திரு. P.S.தண்டபாணி (49-வது வார்டு), திரு. P.கங்காதரன் (49-வது வார்டு), திரு. A.இக்னோஷியஸ் (50-வது வார்டு), திரு. C.சந்திஹாசன் (51-வது வார்டு), திரு. M.டில்லி மகாராஜா (52-வது வார்டு), திருமதி. P.மலர்விழி (53-வது வார்டு), வட்டச் செயலாளர்கள் திரு. மைக்கேல், திரு. சிங்கர் சுரேஷ், திரு. இளவரசு கோடீஸ்வரன், திரு. சிட்டிபாபு, திரு. சாமியார் ராஜா சரவணன், திரு. காமராஜ், திரு. ராஜா, திரு. அன்வர், திரு. அலெக்ஸ் ஒலிமுத்து லாரன்ஸ், திரு. மதன், திரு. ஆர்தர் A.பாபு, திரு. வினோத், திரு. உதயா, திரு. விக்னேஷ், திரு. சீனி, திரு. பாலாஜி, திரு. நாகராஜ், திரு. கோவிந்தராஜ், திரு. மோகன், திரு. சரவணன், திரு. புருஷோத்தமன், திரு. பாலசுந்தர், திரு. பார்த்தசாரதி, திரு. M.மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர். மேலும், ஆர்.கே.நகர் மாநகரச் செயலாளர்கள் திரு. சீனிவாசன், திரு. பாஸ்கர், திரு. மனோகரன், திரு. T.P.ராஜன் மற்றும் வட்டச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்