டிசம்பர் 30, 2025

மதுரை – மலைச்சாமிபுரம், பரமக்குடி – வேந்தோணி மற்றும் அருப்புக்கோட்டை – கல்லூரணி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் நம்மவர் படிப்பகங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு, நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பில் கலைவழித் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெற்றது.

மதுரை – மலைச்சாமிபுரம், அருப்புக்கோட்டை – கல்லூரணி ஆகிய இடங்களில் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வட அமெரிக்கா பிரிவின் மூலமாக நம்மவர் படிப்பகங்கள் செயல்படுகிறது. மேலும் பரமக்குடி வேந்தோணி கிராமத்தில் கமல் பண்பாட்டு மையம் மூலமாகவும் செயல்படுகிறது.

மேற்கண்ட நம்மவர் படிப்பகங்களில் கட்டணமில்லாமல் அனைத்து நூல்களையும் வாசிக்கவும் பட்டப்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளுக்கு மேற்கோள்கள் எடுத்துக் கொள்ளவும் இன்னும் கூடுதலாக தன்னார்வலர்கள் மூலமாக மாலை வேளைகளில் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக டியூஷன் சொல்லிக் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

நம்மவர் தொழிற்சங்க பேரவை மூலமாக அதன் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் முறையான பயிற்றுனர்களை கொண்டு கலைவழித்திறன் மேம்பாட்டு பயிற்சி 2025 அளிக்கப்பட்டது.

நன்றி : மக்கள் நீதி மய்யம்