புதுக்கோட்டை : ஜனவரி 22, 2௦23
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் எனும் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசித்துவரும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் வழங்கும் தொட்டியில் யாரோ சில விஷமிகள் மனித மலத்தினை கலந்துவிட அதனை அருந்திய அப்பகுதி மக்கள் சிலர் உடல்நிலை பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில் குறிப்பிடத்தக்க வகையில் சிறுமியும் பாதிப்படையவே அவர்களின் நிலை அறிந்து அதிர்ச்சியுற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உடனடியாக அங்கே நடந்தவற்றை அறிந்து கொள்ளவேண்டி புதுக்கோட்டை நிர்வாகிகள் சிலரை அனுப்பி வைத்தார். அவர்களும் சம்பவம் நடந்த இடத்திற்கும் மற்றும் பாதிப்படைந்தவர்கள் அனுமதிக்கபட்டிருந்த மருத்துவமனைக்கும் சென்று அங்கிருந்தவர்களுடன் நடந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு குறித்து கள ஆய்வு செய்து அது மட்டுமில்லாமல் தலைவரை அவர்களிடம் தொலைபேசியில் உரையாடச் செய்தனர்.
அச்சிறுமியின் தாயாரிடமும் உரையாடிய தலைவர் அவர்கள் இது போன்ற இழிசெயலை செய்தவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்த காவல்துறையினர் நிச்சயம் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பார்கள் என்றும் உறுதியளித்தவர் மேலும் இத்தகாத செயலை செய்த ஈனர்கள் குறித்து கோபமும் கொண்டார் அவை மட்டுமில்லாது எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பொறுப்புள்ள ஓர் சக குடிமகனாக தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்பும் கோரினார் இது போன்ற செயலை வன்மையாக கண்டிப்பதாக தொடர்ந்து பேசியவர் மக்கள் நீதி மய்யம் சார்பாக சுத்தமான தூய குடிநீர் விநியோகம் செய்திடும் வகையில் இயற்கைச்சூழல் இணைந்த வகையில் செயலாற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தித் தர ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஐவர் குழுவினை அமைத்தார் தலைவர் அவர்கள். வேங்கைவயல் கிராமத்திற்கு அவர்களை அனுப்பிவைத்து அவ்வூர் மக்களிடம் குடிநீர் இயந்திரம் அமைப்பது தொடர்பாக விளக்கங்கள் அளித்து அதற்கான முன்னெடுப்பாக மாவட்ட நிர்வாக ஆட்சியர் அவர்களிடம் அதனை எடுத்துச் சொல்லி மேற்படி காற்றிலிருந்து சுத்தமான குடிநீர் உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்க மக்கள் நீதி மய்யத்திற்கு அனுமதி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டு அதற்கான மனுவினை அளித்தனர். கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களும் சட்டரீதியாக மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க விழைகிறேன் என்று கூறினார்.
நற்பணி என்பதே உயிர்மூச்சாக செய்து வந்த தலைவரும் அவரை பின்பற்றி வரும் மய்யத்தார். தலைவரின் ஆணைக்கிணங்கி பலமுறை வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று மக்கள் நீதி மய்யம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும் என தலைவர் சார்பில் உறுதியளித்தனர்.
வேங்கை வயல் கொடுமைக்கு தீர்வு தேடி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.
வேங்கைவயல் சம்பவம் குறித்த மய்யத்தமிழர்கள் இணையதளத்தில் 30.12.2022 அன்று வெளியான செய்தித்தொகுப்பு (லிங்க்)