பொள்ளாச்சி : ஆகஸ்ட் 15, 2௦23

நடுவுநிலைமை கொள்ளும் கட்சியாக ஆசியாவிலேயே முதன்முதலாக அரசியல் களத்தில் கடந்த 2௦18 ஆம் ஆண்டு முதல் மத்திய மாநில அரசுகளின் மக்களுக்கான நலப்பணிகளை அவர்களுக்கு சென்று சேர்கிறதா என பார்த்துக் கொள்வதும் ஒருவேளை அப்படி அதில் ஏதேனும் முரண்பாடு உள்ளது எனில் அதைச் சுட்டிக் காட்டி சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வது மற்றும் மக்களுக்கு பாதகம் தரும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதனால் உண்டாகும் விளைவுகள் பற்றி உரத்தக் குரல் கொடுப்பதும் முழுமுதல் பணியாக தொண்டாற்றி வரும் மக்கள் நீதி மய்யம் தனது கொள்கைகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறது என்பதற்கு கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைந்து வருவதன் மூலம் தெளிவாக தெரிகிறது. பொள்ளாச்சியில் அவ்வாறு நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது குறித்து மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

13.08.2023 ஞாயிறு அன்று பொள்ளாச்சியில், ‘மய்யத்தை நோக்கி மக்கள்’ விழாவில், 100 புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணையும் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்தது.

நமது பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் மற்றும் நமது துணைத்தலைவர் திரு. தங்கவேலு இருவரும் தலைமை ஏற்று விழாவை சிறப்பித்தார்கள்.

விழாவில் மாநிலச் செயலாளர்கள் திரு. மயில்சாமி, திருமதி.மூகாம்பிகா ரத்னம், திருமதி. டாக்டர் அனுஷா ரவி, கோவை மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் மற்றும் மற்ற மண்டல மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்புமிகு விழாவை மாநில தொழில் முனைவோர் அணியின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.ராதா ஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தார்.மக்கள் நீதி மய்யம்