நவம்பர் : 03, 2025
இந்தியாவின் பசியாற்றிய மனிதர்’ – புத்தக வெளியீடு இந்தியாவின் வயல்களையும், எதிர்காலத்தையும் மாற்றியமைத்த ஒரு ஜாம்பவானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாரத ரத்னா பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “இந்தியாவின் பசியாற்றிய மனிதர்” (The Man Who Fed India) என்ற புத்தகத்தை, மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டார்.
இப்புத்தகத்தை எழுத்தாளர் செல்வி பிரியம்பதா ஜெயக்குமார் அவர்கள் எழுதியுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த புத்தக வெளியீடு, இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையான மறைந்த பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களின் நீடித்த பங்களிப்பை கௌரவிக்கிறது. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவைகளை இந்தப் புத்தகம் ஆவணப்படுத்துகிறது.
புத்தகத்தை வெளியிட்ட தலைவர் & MP திரு.கமல்ஹாசன் அவர்கள் விஞ்ஞானி சுவாமிநாதன் அவர்கள் குறித்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.
Honouring a legend who transformed India’s fields and future – MP & MNM President Mr. Kamal Haasan launched “The Man Who Fed India”, the biography of Bharat Ratna Prof. M.S. Swaminathan by Priyambada Jayakumar.
நன்றி : மக்கள் நீதி மய்யம்