பிப்ரவரி 24, 2026

கமல்ஹாசன் நற்பணி இயக்கம் (வட அமெரிக்கா), கமல் பண்பாட்டு மையம் மற்றும் திரு.கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பில் நம்மவர் படிப்பகங்கள் முறையே மலைச்சாமிபுரம், பரமக்குடி மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய மூன்று பகுதியிலும் நிறுவப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அப்பகுதி மக்கள் கற்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் உபயோகம் செய்து வருகிறார்கள். திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/kamalpanpattu/status/2026192168075862302?s=20

நம்மவர் படிப்பகங்களில் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் மற்றும் நூலகர்கள் ஆகியோரிடம் அவர்களது அனுபவங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டு, கற்பதால் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு வளர்வதும், மேலும் கல்வியின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியத்தின் மேன்மையையும், திறன் மேம்பாட்டின் அவசியத்தையும் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

பரமக்குடி – வேந்தோணி மற்றும் அருப்புக்கோட்டை – கல்லூரணியில், நம்மவர் படிப்பகங்கள் நிறுவி ஒரு வருடம் நிறைவு செய்ததை முன்னிட்டு,

இரு படிப்பகங்களிலும் பணியாற்றும் நூலகர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுடன்,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் காணொலியில் உரையாடினார். அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியத்தின் மேன்மையையும், திறன் மேம்பாட்டின் அவசியத்தையும் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.

எதிர்பாராத இந்த உரையாடலால், அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பயிலகங்களின் மாணவர்களும், நூலகர்களும் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். – கமல் பண்பாட்டு மையம்

நன்றி : மக்கள் நீதி மய்யம் & கமல் பண்பாட்டு மையம்