சென்னை : ஜனவரி 15, 2026
சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி கடந்த 2007 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் திரு.கருணாநிதி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை தமிழ் மையம் எனும் அமைப்பின் நிறுவனரான திரு.ஜகத் கஸ்பர் மற்றும் திருமதி.கனிமொழி MP ஆகியோரால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வை நமது மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார். இன்றைய நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா IPS (பணி ஓய்வு) அவர்களும் மற்றும் மாநில துணைச்செயலாளர் திரு.சண்முக ராஜன் அவர்களும் பங்கேற்றனர்.


“நேற்று 14.1.2026 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” நிகழ்வில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக, கட்சித் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா IPS (Retd) அவர்கள் கலந்து கொண்டார்.
அவருடன் மாநில துணை செயலாளர் திரு. சண்முகராஜன் அவர்களும் கலந்து கொண்டார். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்