நவம்பர் 11, 2025
கடந்த 2018 ஆண்டில் துவக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி அடுத்த ஆண்டிலேயே அதாவது 2019 இல் பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டது. அப்போது வழங்கப்பட்ட சின்னமான பேட்டரி டார்ச் தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டது. தேர்தல் பரப்புரையில் பெரும் ஆர்வத்தை உண்டாக்கியது மேலும் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பரப்புரை அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மூலம் பொதுமக்களான வாக்காளர்களால் கவரப்பட்டு கணிசமான அளவில் வாக்குகளை பெற்று மனங்கவர்ந்த கட்சிகளில் ஓர் கட்சியாக மிக முக்கியமான இடத்திற்கு நகர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகான 2021 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட போதும் அதே சின்னமான பேட்டரி டார்ச் ஒதுக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டது. சட்டமன்ற தேர்தலிலும் கணிசமான வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தில் இடம்பெற்றது.
வருகின்ற 2026 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பங்கேற்கும் வகையில் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச் சின்னம் வழங்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
“மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்.
புதுடெல்லி, நவம்பர் 11, 2025
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொதுச்சின்னத்தை ஒதுக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரதிநிதிகள் புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, விண்ணப்பத்தை நேரில் அளித்தனர்.
– ஊடகப் பிரிவு, மக்கள் நீதி மய்யம்.
Makkal Needhi Maiam Approaches Election Commission of India for Allotment of Common Symbol
New Delhi, November 11, 2025
Makkal Needhi Maiam (MNM) today applied to the Election Commission of India (ECI) seeking the allotment of a common symbol from a preferred list of 10 symbols for its candidates contesting in the upcoming 2026 Tamil Nadu Assembly Elections.
A delegation from Makkal Needhi Maiam met with ECI officials and personally submitted the application at the Commission’s office in New Delhi.

நன்றி : மக்கள் நீதி மய்யம்