நவம்பர் 11, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களால் மதுரையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று துவக்கப்பட்டது. அப்போதிருந்து செயல்படத் துவங்கிய பின்னர் 2019 இல் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட வேண்டி பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டதும் அச்சமயம் இந்திய தேர்தல் ஆணையம் டார்ச் லைட் சின்னத்தினை ஒதுக்கித் தந்தது. அதன் பிறகான சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதே சின்னத்தில் போட்டியிட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்.
புதுடெல்லி, நவம்பர் 11, 2025 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்காக விருப்பப்பட்ட 10 சின்னங்களின் பட்டியலில் இருந்து ஒரு பொதுச்சின்னத்தை ஒதுக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரதிநிதிகள் புதுடெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, விண்ணப்பத்தை நேரில் அளித்தனர்.
– ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.
நன்றி : மக்கள் நீதி மய்யம்