சங்ககிரி : டிசம்பர் 25, 2025

நூறு நாள் வேலைத்திட்டம் புதிய சட்டம் இயற்றப்பட்டது குறித்தான பல்வேறு சர்ச்சைகள் தொடர்பாக ஆளும் ஒன்றிய அரசின் போக்கினை கண்டித்து மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் ஆலோசனைபடி மாநில செயலாளர், மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் மாவட்ட செயலாளர், மாவட்ட அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நேற்று சேலம் மண்டலத்திற்குட்பட்ட சங்ககிரி ம.நீ.ம. மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேலம் மண்டலச் செயலாளர் திரு. காம்ராஜர் அவர்களின் அறிவுறுத்தல்படி சேலம் மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஒன்றியச் செயலாளர் திரு. சரவணன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்… – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்