டிசம்பர் 24, 2025
கடந்த காங்கிரஸ் கூட்டணியின் அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்திற்கு அண்ணல் காந்தியடிகள் பெயர் சூட்டட்பட்டு அமலில் இருந்து வந்தது.
ஊரக வேலைவாய்ப்பு, சுயநிறைவு, கைத்தொழில், கிராம சுயாட்சியை மையமாக வைத்து அவர் முன்வைத்த கருத்துகளே இன்றைய நூறு நாள் வேலைத் திட்டத்தின் அடிப்படை.காந்தியடிகளின் முக்கிய கோட்பாடுகள்:
ஊரக ஏழைகளின் பொருளாதார பாதுகாப்பு
கிராம சுயராஜ்யம் (Village Swaraj)
உழைப்புக்கு மரியாதை
வேலைக்கு உரிமை
2005 ஆண்டு அப்போதைய மன்மோகன்சிங் தலைமையிலான அரசு அமல்படுத்தியது சட்டபூர்வமான துவக்கமான 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 இல் சுமார் 200 கிராமங்களில் துவங்கிய வேலை வாய்ப்பு படிப்படியாக இந்தியா முழுமைக்கும் விரிவடைந்தது. திட்டத்தின் முக்கிய அம்சமாக ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வாய்ப்பினை வழங்குவதும், வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் மரக்கன்றுகள் நடுதல், குளம் கண்மாய் சீரைமைத்தல், நீர் மேலாண்மை, சாலைகளை சீரமைத்தல் என பல்வேறு வளர்ச்சி திட்டங்களை முன்வைத்தே இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது.
காந்தியடிகளின் ஊரக முன்னேற்றக் கனவு நிறைவேறும் வகையில் இத்திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது எனலாம்.
நூறு நாள் வேலைத் திட்டம் என்பது காந்தியடிகளின் கிராம வளர்ச்சி கனவு, உழைப்பின் மரியாதை மற்றும் சமூக நீதிக் கோட்பாடு இவைகளின் நவீன வடிவமே ஆகும்.


ஆனால் இத்தகைய கோட்பாடுகளை உள்ளடக்கிய இத்திட்டத்தின் பெயரை அதன் சாராம்சத்தை சிதைக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டம் (MGNREGA) தற்போது பெயர் மாற்றம்/சட்டம் மாற்றம் அடைந்துள்ளது மற்றும் புதிய சட்ட கட்டமைப்பில் அறிமுகமாகியுள்ளது எனினும் நாடெங்கும் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளின் ஆட்சி அல்லாத மாநிலங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. மேலும் இதில் வழங்கப்படும் ஊதியம் இதுவரை ஒன்றிய அரசின் துறையிலிருந்து வழங்கப்பட்டு வந்ததை தற்போதைய திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் முறையே ஒன்றிய அரசு 60 சதவிகிதமும் மாநில அரசு 40 சதவிகிதமும் ஊதியமாக வழங்கப்பட வேண்டும் என்கிற ஷரத்தை திருத்தும் செய்துள்ளனர். அதன்படி பார்த்தோமானால் இதனால் மாநில அரசுகளுக்கு இத்திட்டம் மூலம் நிதிச்சுமை ஏற்படும் வகையில் அமைந்து விடும். இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆளும் ஒன்றிய அரசின் எதேச்சதிகார போக்கினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.


அதனையொட்டி தமிழக அரசின் சார்பில் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் ஒன்றிணைத்து தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருவதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சென்னை மேடவாக்கம் சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் பங்கேற்று உரையாற்றி கண்டனம் தெரிவித்தார்.
“அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க சட்டத்தைக் கொண்டுவந்த, ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்பு.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் சென்னை மேடவாக்கத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிச. 24) நடைபெற்றது.
இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள் பங்கேற்றுப் பேசினார்.
அவர் பேசும்போது, “தற்சார்பும் தன்னிறைவும் கொண்ட கிராம ராஜ்யத்தைக் கனவு கண்டவர் காந்தி. அதற்கான அடித்தளத்தை உருவாக்குவதே தேசிய வேலை உறுதித் திட்டத்தின் நோக்கம். ஒன்றிய அரசின் தற்போதைய சட்டம் காந்தியின் கனவைச் சிதைத்து, 100 நாள் வேலை உறுதித் திட்டத்தையே முடக்குவதாக அமைந்துவிடும் என எச்சரித்தார்.
மேலும் தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களால் இரயில் பெட்டியிலிருந்து தூக்கியெறியப்பட்டார் அண்ணல் காந்தியடிகள். விளைவு: வெள்ளையர்கள் சாம்ராஜ்யத்தை இந்தியாவிலிருந்து துடைத்தெரிந்தார்.
அதேபோல இன்று 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயரிலிருந்து அண்ணல் காந்தியடிகளின் பெயர், ஒன்றிய பாஜக அரசால் தூக்கியெறியப்படுகிறது. இதன் விளைவு கோடான கோடி இந்திய மக்களின் உள்ளங்களில் வாழும் காந்தியடிகள், பாஜக கனவு காணும் சாம்ராஜ்ஜியத்தை தகர்த்தெரிவார்கள். அதற்காகத்தான் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் அவர்களின் தலைமையில், கட்சியின் மாநிலச் செயலாளர்கள் திரு. வைத்தீஸ்வரன், திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. லக்ஷ்மன், திரு. அரவிந்ராஜ், சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன், மாவட்டச் செயலாளர்கள் திரு. சைதை ஜெ.கதிர், திரு. உதயகுமார், திரு. தனபாலன், திரு. மாறன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை அமைப்பாளர் திரு. மாடசாமி, திரு. யுவராஜ் ஆகியோருடன் மண்டல, மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்று, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்ட முழக்கமிட்டனர்… – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்