டிசம்பர் 18, 2025
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்த 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை குளறுபடி செய்து திட்டத்தின் சாராம்சத்தை கலைத்திடும் விதமாக ஆளும் ஒன்றிய அரசு மசோதாவை தாக்கல் செய்துள்ளது மக்கள் விரோத போக்கினை கடைபிடிப்பதாகும்.
இத்தகைய மக்கள் விரோத பாசிச போக்கினை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் (தமிழ்நாடு) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. தலைவரின் ஆலோசனைப்படி, துணைத் தலைவர்கள் பொதுச்செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் முன்பு பெருந்திரளான நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் திரு.அரவிந்த்ராஜ் அவர்கள் நமது கட்சியின் சார்பில் கண்டன உரையாற்றினார். மேலும் மாணவரணி மாநில செயலாளர் திரு.ராகேஷ் ராஜசேகரன், சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் ஆகியோரும் பங்கேற்றனர்.
https://twitter.com/maiamofficial/status/2001605685931557034?s=20
நன்றி : மக்கள் நீதி மய்யம்