ஜூலை 27, 2025
மறைந்த அறிவியல் மாமேதை திரு.அப்துல் கலாம் அவர்களின் மீது அளவற்ற அன்பும் நன்மதிப்பும் கொண்டவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். கல்வியின் மகத்துவமும் அதன் பெருமையும் அறிந்தவர் ஆதலால் அறிவியலாளர்களின் மீது மரியாதை செலுத்துபவர். நடுவுநிலைமை கொள்கை கொண்ட கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியினை துவக்கும்போது அப்துல் கலாம் அவர்களது இல்லத்தில் வைத்து மரியாதை செய்து 2018 இல் துவக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அன்னாரது நினைவு நாளான இன்று தமது புகழஞ்சலி செலுத்தியுள்ளார் நம்மவர் அவர்கள்.

“அறிவியலும் கலைமனமும் கலந்து நிறைந்தவர்; மாணவர் மனங்களில் இனித்து நிலைத்தவர் ஐயா அப்துல் கலாம். அவரின் நினைவு நாள் இன்று. அந்தப் பெருந்தகையின் நினைவிடத்திலிருந்துதான் எனது அரசியல் பயணம் தொடங்கியது என்பதை நினைவுகூர்கிறேன். உயரங்களிலும் தாழ்வுகளிலும் எனக்குத் துணை நிற்பவை அவர்தம் சிந்தையும் சொற்களும். அவருடைய எண்ணங்களை ஈடேற்றும் வல்லமை நமக்கு வசப்படட்டும்”. – திரு.கமல்ஹாசன், பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்