ஜூன் 16, 2025

வரலாறு தெரிந்தவர்களுக்கு கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களைப் பற்றியும் நிச்சயம் அறிந்து இருப்பார்கள். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் பட்டிவீரன்பட்டி என்கிற ஊரில் பிறந்து வளர்ந்தார். அவ்வூர் அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்புவரை படித்தவர் பின்னர் மதுரையில் ஆங்கில கல்வி வழியில் படிப்பைத் தொடர்ந்தார். அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக டிவிஎஸ் நிறுவனர் மகளான சௌந்திரம்மாள் இலவச விடுதியில் சேர்ந்தார்.

தமது குடும்பத்தின் ஏழ்மை மற்றும் பன்னிரண்டு உடன்பிறந்தவர்கள் ஈன்ற தனது தாயின் பேறுகால சிக்கல்கள் மூலமே இவருக்கு சமூக நீதி குறித்தான பல புரிதல்கள் தோன்றின. 1946 இல் காந்தியடிகள் மதுரைக்கு சுற்றுப்பயணம் வந்த போது காந்தியம் மற்றும் சர்வோதய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவ்வமயம் சர்வோதய இயக்கத்தில் பணியாற்றி வந்த சங்கரலிங்கம் ஜெகன்னாதன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் கிருஷ்ணம்மாள் அவர்கள்.

சங்கரலிங்கம் ஜெகநாதன் மிகுந்த வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர் எனினும் 1930 இல் காந்தியடிகள் தலைமையில் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் சங்கரலிங்கம் அவர்கள். காந்தியாருடன் மேடையில் இருந்து பல போராட்டங்களில் பங்கு பெற்றதுடன் 1958 இல் மார்டின் லூதர் கிங் அவர்களையும் சந்தித்து உரையாற்றினார் கிருஷ்ணம்மாள். வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கு கொண்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். சுதந்திர இந்தியாவில் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததனால் சங்கரலிங்கம் ஜெகன்னாதன் மற்றும் கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் திருமணம் 1950 இல் நடைபெற்றது.

1950 இல் மற்றும் 1952 இடையே இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பூமி தான இயக்கத்தில் பங்கு கொண்டதும், கிராமத்தில் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலம் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உயரும் என்பதும் காந்திய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். இறால் பண்ணைகளுக்கு விளைநிலங்கள் கொடுக்கப்படுவதையும் எதிர்த்துப் போராடினார்கள் இத்தம்பதியர். 2013 ஆம் ஆண்டில் கணவர் சங்கரலிங்கம் மறைந்த பிறகும் மக்களுக்காக சேவையே உயர்ந்தது என்று வாழ்ந்து வரும் திருமதி.கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமைக்கு பெண்மணி சமூக செயற்பாட்டாளர் சுதந்திர போராளி திருமதி.கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களுக்கு தமது மனம் நிறை பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்து.

காந்தியம் என்னும் கருத்தாக்கத்துக்கு உருவமாய் இன்று நம் கண்முன் நிற்கும் பெருந்தகையாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

சட்டரீதியான போராட்டங்களால், செயல்பாடுகளால் லட்சக்கணக்கான எளிய மக்களுக்கு வாழ்வாதாரம் பெற்றுத் தந்த காந்தியர்

வாழ்வு, சேவை என்பவை இரு வேறு விஷயங்கள் என்றில்லாமல், வாழ்வே சேவை என்று வாழும் அம்மையார் கிருஷ்ணம்மாள் அவர்களின் வயதில் இன்று நூறாவது ஆண்டு தொடங்குகிறது. அவரை வணங்கி வாழ்த்துவது என் கடமை. ‘இன்னுமொரு நூற்றாண்டு இரும்’ என்னும் சம்பிரதாய வாழ்த்துச் சொல் இவருக்கே பொருந்தும். வாழ்க பல்லாண்டு. – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்