ஜூன் : 25, 2025
நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதும் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் அளப்பரிய பிரம்மாண்டங்களை செய்து வருவதும் அறிந்ததே. உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. 1982 இல் விண்வெளிக்கு சென்ற நமது இந்திய விண்வெளி வீரர் திரு.ராகேஷ் ஷர்மா அவர்களின் சாதனயை ஒட்டிய இன்னுமொரு சாதனையை தொடர்ந்து வீரர் ஷுபான்சு சுக்லா விண்வெளிக்கு செல்கிறார். நமது விண்வெளி ஆராய்ச்சியில் இன்னுமொரு மகுடமாக அமையவிருக்கிறது நமது விண்வெளி வீரர் ஷுபான்சு சுக்லா அவர்களது பயணம். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“So proud today, as Group Captain Shubhanshu Shukla journeys to the International Space Station, joining the immortal Rakesh Sharma in the stars.
I look forward to the day our tricolour rises to the skies on an Indian rocket, from Indian soil, carrying an Indian astronaut to an Indian space station.”
Jai Hind – Thiru.Kamal Haasan, President – Makkal Needhi Maiam
நன்றி : மக்கள் நீதி மய்யம்