டிசம்பர் 06, 2025
இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும், எவர் எந்த பதவி வகித்தாலும் கடைநிலை வாழ்வு நடத்துபவராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் என்பது ஒன்று தான் அதில் ஏற்றமும் தாழ்வும் ஏதுமில்லை என்பதும் எளியோர்கள் கல்வி கற்று முன்னேறி சரிக்கு சமமாக ஆளுமைக்கு வர வேண்டும் என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்ட அரசியலமைப்பை வடிவமைத்ததில் மிக முக்கியமானவர் பாபசாஹேப் அண்ணல் B.R அம்பேத்கர் அவர்கள்.

அன்னாரது நினைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உருப்பினருமான் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் புகழுரை வெளியிட்டுள்ளார்.
“சராசரிக் குடிமக்களுக்கு முதலும் இறுதியுமான நீதிப் புகலிடமாக விளங்கும் அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய மேதை பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று, நாம் ஒவ்வொருவரும் நமது உரிமைகளையும் கடமைகளையும் அறிந்துகொள்வோம் என்னும் உறுதியை ஏற்க வேண்டும். இந்தியக் குடிமக்கள் தங்கள் அதிகாரத்தை முற்றிலும் உணரும் வண்ணம், அரசுகள் அம்பேத்கர் அவர்களின் சொற்களை அடித்தட்டு வரை கொண்டுபோய்ச் சேர்க்க முன்வர வேண்டும். வாழ்க அம்பேத்கர் புகழ். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மாநிலங்களவை உறுப்பினர்
நன்றி : மக்கள் நீதி மய்யம்