டிசம்பர் 23′ 2025

ஐந்து வயதில் வெள்ளித்திரையில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமாகி இன்று வரை அசைக்க முடியாத ஓர் ஆளுமையாக கோலோச்சி வருகிறார் என்றால் மிகையாகாது.

குழந்தை நட்சத்திரமாக பரிணமித்து படிப்படியாக வளர்ச்சி அடைந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் தன்னை மெருகேற்றி கொள்ள வைத்து பன்முகத்தன்மை கொண்ட கதாநாயகனாக மிளிரச் செய்ததில் இயக்குனர் சிகரம் திரு.பாலச்சந்தர் அவர்களின் பங்கு அளப்பரியது. அவ்வகையில் தனது குருவுக்கு மரியாதையை என்றும் செய்யத் தவறியதில்லை என்பதற்கு தனது திரைப்படத் தயாரிப்பு அலுவலகத்தில் தனது குருவின் சிலையை நிறுவியிருப்பதே சாட்சி எனலாம்.

உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும். இன்று கேபி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல. “இந்த இயக்குனர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன். – கமல்ஹாசன்

https://twitter.com/Maiatamizhargal/status/2003507558410256431?s=20

நன்றி : மக்கள் நீதி மய்யம் & தலைவர் திரு.கமல்ஹாசன்