டிசம்பர் : 28, 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியை நிறுவி தமிழகத் தேர்தலில் பங்கேற்று இருமுறை சட்டமன்ற உறுப்பினராக மற்றும் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பங்காற்றியுள்ளார்.

தமிழ்த்திரையுலகில் கதாநாயகனாக தன்னை நிலைநிறுத்தியும் பெரும்புகழோடு திகழ்ந்தார். கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களிடம் மிக அன்பு பாராட்டினார் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய போது விஜயகாந்த் அவர்களிடம் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். அந்தளவில் பெரும் நட்பு பாராட்டிக் கொண்டனர்.

கடந்த ஆண்டில் கேப்டன் அவர்கள் இயற்கை எய்தினார். அவரது நினைவு நாளான இன்று நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

“ஈகை எனும் அருங்குணத்தால் தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த என் அன்பிற்கினிய நண்பர், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினம் இன்று. அவருடனான நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றன.” – கமல்ஹாசன்

நன்றி : மக்கள் நீதி மய்யம்