ஆகஸ்ட் : 14, 2023

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 நாளை தமிழகம் முழுதும் உள்ளாட்சிகளில் நடைபெறவிருக்கும் கிராம சபை கூட்டங்களில் பங்கு பெறுமாறு மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது உள்ளாட்சி மன்றங்கள் நடத்தும் கிராம சபைகளில் பங்கு கொண்டு அதில் மக்களுக்கான பணிகள் என்னென்ன நடைபெற்றது அல்லது நடைபெறவிருக்கும் பணிகள் குறித்தான தகவல்கள் திட்ட மதிப்பீடுகள் மற்றும் வரவு செலவு கணக்குகள் போன்றவைகள் மக்களிடம் கான்பிக்கபடாமல் இருந்தால் அவற்றை தெரிவிக்கக் கோருதல் ஆகிய ஆக்கப்பூர்வமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு மக்களுக்கான சேவைகளில் உண்மைத்தன்மை உள்ளதா என உறுதி செய்து கொள்வதும் முக்கியமாகும். எனவே வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.